சீனாவுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையிலான தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அரபு நாடுகள் லீக்கின் தலைமைச் செயலாளர் அஹ்மத் அபெல் கெய்ட் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்புப் பேட்டியளித்தார்.
கடந்த சில ஆண்டுகளாக, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் மற்றும் அரபு நாட்டுத் தலைவர்களின் நெடுநோக்கு வழிக்காட்டலுடன், சீன-அரபு நாடுகளிடையே பயனுள்ள ஒத்துழைப்புகள் தொடர்ச்சியாக ஆழமாகி வருகின்றன. கடந்த பல ஆண்டுகளில், அரபு நாடுகளின் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளி நாடாக சீனா திகழ்கிறது. இது குறித்து, கெய்ட் கூறுகையில், 2004ஆம் ஆண்டு, இரு தரப்புகளின் வர்த்தக மதிப்பு 4600 கோடி அமெரிக்க டாலராகும். ஆனால், 2025ஆம் ஆண்டு வரை, இந்த மதிப்பு 40 ஆயிரத்து 900 கோடி அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு, இரு தரப்புகளுக்கும் நன்மை அளித்துள்ளதை இது வெளிப்படுத்தியுள்ளது என்றார்.
மேலும், அரபு நாடுகள் அனைத்தும் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவுக்கான கட்டுமானத்தில் ஆக்கமுடன் பங்கெடுத்து, சீனாவுடன் நே ரடியாக ஒத்துழைப்பு மேற்கொண்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
தவிரவும், 2026ஆம் ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ள 2வது சீன-அரபு நாடுகள் உச்சி மாநாட்டுக்கு அவர் எதிர்பார்ப்பு தெரிவித்தார்.
