வியட்நாமின் தேசிய சட்டமன்றத் தலைவருடன் ஷிச்சின்பிங்சந்திப்பு

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஏப்ரல் 8ஆம் நாள் பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மாமண்டபத்தில் வியட்நாமின் தேசிய சட்டமன்றத் தலைவர் வூங் டின் ஹியூவைச் சந்தித்துரையாடினார்.

ஷிச்சின்பிங் கூறுகையில், இரு தரப்புகளின் கூட்டு முயற்சி மூலம், நானும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி பொதுச் செயலாளர் நுயன் புத்ருங்கும் எட்டியுள்ள ஒத்த கருத்துக்கள் நடைமுறைக்கு வரப்பட்டு வருகின்றன.

 சீன-வியட்நாமின் பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானம் மேலும் அதிகமான சாதனைகளைக் கிடைக்க இரு தரப்பும் பாடுபட வேண்டும்.

மேலும், தங்களது நவீனமயமாக்கக் கட்டுமானத்துக்குச் சேவை புரிந்து, இரு நாட்டு மக்களுக்கு நலன்களைக் கொண்டு வர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.

You May Also Like

More From Author