சீனப் பொருளாதாரத்தின் உயர் தர வளர்ச்சியின் சாதனைகள் பற்றி சீன அரசவை தகவல் தொடர்பு அலுவலகம் 3ஆம் நாள் செய்தியாளர் கூட்டததை நடத்தியது.
இதில் 2025ஆம் ஆண்டில் ஒருங்கிணைந்த தேசிய சந்தையின் கட்டுமானத்துக்கான வழிகாட்டல் கூடிய விரைவில் சமூகத்துக்கு வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், அரசு சாரா பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றுவதற்கான சட்டத்தின் வெளியீடும் விரைவுபடுத்தப்படும் என்று சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.