சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஏப்ரல் 8ஆம் நாள் பெய்ஜிங்கில் பிரெஞ்சு மெரியக்ஸ் நிதியத்தின் தலைவர் மெரியக்ஸ் மற்றும் அவரின் மனைவியுடன் சந்தித்துரையாடினார்.
சீன-பிரெஞ்சு உறவின் வளர்ச்சிக்கும் சீன சுகாதார மற்றும் ஆரோக்கிய லட்சியத்துக்கும் மெரியக்ஸ் நிதியம் நீண்டகாலமாக அளித்துள்ள கவனம் மற்றும் ஆதரவு குறித்து ஷிச்சின்பிங் பாராட்டு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், போர் வேண்டாம். அமைதியில் ஊன்றி நிற்க வேண்டும் என்று சீனா எப்போதும் கருதுகிறது. போரை நிறுத்தி அமைதியின் நனவாக்கத்தையும் மனிதகுலத்தின் பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்தையும் முன்னேற்ற வேண்டுமென சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது.
இவ்வாண்டு, சீன-பிரெஞ்சு தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 60ஆவது ஆண்டு நிறைவாகும். இரு நாட்டுறவுக்குச் சீனா பெரும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. பிரான்ஸ் தரப்புடன் இணைந்து உயர் நிலைப் பரிமாற்றத்தைத் தொடர்ந்து வலுப்படுத்தி ஒன்றுக்கு ஒன்று பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை மேலும் நெருக்கமாக்கி இரு நாட்டுறவை மேலும் உயர்ந்த நிலைக்கு முன்னேற்ற வேண்டுமென சீனா விரும்புவதாக ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.