“ஒரே ஒரு NOC கொடுக்கல…. படமே நின்னுடுச்சு” இயக்குநரின் ஒட்டுமொத்த உழைப்பையும் முடக்கிய நடிகர் சூரி…. பின்னணி என்ன….? 

Estimated read time 1 min read

நடிகர் சூரியால் தனது ஒட்டுமொத்த உழைப்பும் வீணாகி, ஒரு பெரிய பட புராஜெக்ட்டே முடங்கிப் போன கதையை ‘பூ காய் கனி’ பட இயக்குநர் வெற்றிவீரன் ஆதங்கத்துடன் உடைத்துள்ளார். ஆரம்பத்தில் இவரும் சூரியும் சேர்ந்து ஒரு படம் பண்ணவிருந்ததாகவும், அது ஹாட்ஸ்டாரில் வெளியாகும் அளவுக்குப் பேச்சுவார்த்தை போய், சில காரணங்களால் இடையில் நின்றுவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அதன் பின்னர் ஒரு பெரிய நிறுவனம் இந்தக் கதையைத் தயாரிக்க முன்வந்ததால், பழைய தயாரிப்பாளர் உட்பட எல்லோரிடமும் என்ஓசி (NOC) வாங்கியதாக வெற்றிவீரன் தெரிவித்துள்ளார்.

ஆனால், நடிகர் சூரியிடமிருந்து மட்டும் அந்த கதைக்கான என்ஓசி இறுதிவரை கிடைக்கவே இல்லை என்று இயக்குநர் வெற்றிவீரன் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சூரியின் இந்த ஒரே ஒரு பிடிவாதத்தால் தனது ஒட்டுமொத்த உழைப்பும், அந்தப் படத் திட்டமும் அப்படியே முடங்கிப் போய்விட்டதாக அவர் ஆவேசப்பட்டுள்ளார். எளிமையானவர் என்று பெயரெடுத்த நடிகர் சூரி, ஒரு இயக்குநரின் வாழ்க்கையில் இப்படி ஒரு சதி செய்ய என்ன காரணம் என்ற விவாதம் இப்போ சினிமா வட்டாரத்தில் தீயாய் பரவி வருகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author