சீன-அமெரிக்க பொருளாதார வர்த்தக கலந்தாய்வின் சாதனைகள்

சீனாவும் அமெரிக்காவும் பொருளாதார வர்த்தக கலந்தாய்வில்  எட்டியுள்ள சாதனைகள் குறித்து சீன வணிக அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அறிமுகம் செய்தார்.

அப்போது அவர் கூறுகையில்,

மே 13ஆம் நாள் இரு நாட்டு பொருளாதார வர்த்தக குழுக்கள், தென்கொரியாவில் கலந்தாய்வு செய்தன. இப்போது வரை பல சாதனைகளை எட்டியுள்ளன.

முதலில், முந்தைய கலந்தாய்வில் எட்டியுள்ள முடிவுகளை நடைமுறைப்படுத்தி, தொடர்புடைய சுங்க வரி குறித்து பொது கருத்துகளை எட்டியுள்ளன. இரண்டாவது, வர்த்தக ஆணையம் மற்றும் முதலீட்டு ஆணையத்தை உருவாக்க இரு நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன. வர்த்தக மற்றும் முதலீட்டு துறைகளில் இருதரப்புகளின் அக்கறை கொண்ட பிரச்சினைகள் இதில் விவாதிக்கப்பட்டன.

மூன்றாவது, சில வேளாண் பொருட்கள் பற்றிய சுங்க வரி சாரா தடை மற்றும் சந்தை நுழைவு வரையறை பிரச்சினையை இருதரப்பும் சமாளிக்கும் அல்லது இவற்றின் தீர்வை நடைமுறையாக முன்னேற்றும். நான்காவது, குறிப்பிட்ட அளவில் சுங்க வரி குறைப்பதன் மூலம், வேளாண் பொருட்கள் உள்ளிட்ட பல துறைகளின் வர்த்தகத்தை விரிவாக்க இருதரப்பும் ஒப்புக்கொண்டன.

ஐந்தாவது, அமெரிக்காவின் விமானங்களைச் சீனா வாங்குவது மற்றும் விமான இயந்திரம், உதிரி பாகங்கள் ஆகியவற்றை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதை அமெரிக்கா உத்தரவாதம் செய்வது குறித்து இருதரப்பும் ஏற்பாடுகளை உருவாக்கின.

Please follow and like us:

You May Also Like

More From Author