தத்துவ மற்றும் சமூக அறிவியலின் உயர் தர வளர்ச்சி குறித்து ஷிச்சின்பிங் உத்தரவு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத் தலைவருமான ஷிச்சின்பிங் அண்மையில் தத்துவ மற்றும் சமூக அறிவியலின் உயர் தர வளர்ச்சி குறித்து முக்கிய உத்தரவை வெளியிட்டார்.

ஷிச்சின்பிங் குறிப்பிடுகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் 18ஆவது தேசிய மாநாட்டுக்குப் பின்பு, தத்துவ மற்றும் சமூக அறிவியல் துறை கட்சி மத்திய கமிட்டியின் ஏற்பாடுகளை உணர்ச்சிப்பூர்வமாக நடைமுறைப்படுத்தியுள்ளது.

அறிவுப் புத்தாக்கம், தத்துவ புத்தாக்கம், வழிமுறைப் புத்தாக்கம் ஆகியவற்றைப் பயனுள்ளதாக முன்னேற்றி மதிப்பு வாய்ந்த ஆய்வுச் சாதனைகளைப் பெறுவதோடு, கட்சி மற்றும் நாட்டின் பணிகளுக்கு மேலும் நன்கு சேவையளித்துள்ளது என்றார்.

You May Also Like

More From Author