
தென்மேற்கு பருவமழை 26-ஆம் தேதி வாக்கில் கேரள பகுதிகளில் துவங்கக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை நிலவரத்தின்படி, குமரிக்கடல் மற்றும் வடகிழக்கு தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சிகள் நிலவுகின்றன. அத்துடன், மேற்கு விதர்பா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதையும் அமைந்துள்ளது.
மே 17: நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும். தமிழகத்தின் இதர இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மே 18: நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மே 19: நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் கோவை, திருப்பூர் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.
மே 20 முதல் மே 23 வரை: தமிழகத்தின் ஒருசில இடங்கள், புதுவை மற்றும் காரைக்காலில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30-40 கி.மீ வேகம்) லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். மே 22, 23-ல் தமிழகத்தின் ஒருசில மற்றும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று மே 17,18 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36∘ C முதல் 37∘ C வரை இருக்கக்கூடும். குறைந்தபட்ச வெப்பநிலை 28∘ C முதல் 29∘ C வரை பதிவாக வாய்ப்புள்ளது.
மே 17 முதல் மே 21 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றங்கள் இருக்காது. பரவலான மழை காரணமாக, பெரும்பாலான இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பான அளவை விட 2∘ C முதல் 3∘ C வரை குறைய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
