இன்று தொடங்குகிறது மலர் கண்காட்சி – உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

Estimated read time 0 min read

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலர்க் கண்காட்சி இன்று தொடங்கும் நிலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

கோடை விடுமுறையை முன்னிட்டு குளுகுளு சீசனை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் நீலகரி மாவட்டம் உதகைக்கு படையெடுத்தனர். அங்கு சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக 128வது மலர் கண்காட்சி அரசு தாவரவியல் பூங்காவில் இன்று துவங்கிறது. இதையொட்டி அங்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் பூங்காவில் உள்ள மலர்களை கண்டு ரசித்தும், குடும்பத்துடன் புகைப்படம் எடுத்தும் பொழுதை கழித்தனர்.

You May Also Like

More From Author