பிரபலமாகியுள்ள 10ஆவது சீன-ரஷிய பொருட்காட்சி

10ஆவது சீன-ரஷிய பொருட்காட்சி சீனாவின் ஹெலுங்ஜியாங் மாநிலத்தின் ஹார்பின் நகரில் நடைபெறுகின்றது. 17ஆம் நாள் இந்த பொருட்காட்சி துவங்கிய பிறகு, இரு நாடுகளைச் சேர்ந்த பல்வேறு துறைகள், ஒன்றிடம் இல்லாததை மற்றொன்று நிறைவு செய்யும் மேம்பாடுகளைப் பயன்படுத்தி, பன்முக நடைமுறை ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, பல்வேறு தொடர்பு நடவடிக்கைகளை பயனுள்ளதாக நடத்தி வருகின்றன.

நம்பிக்கை, ஒத்துழைப்பு, கூட்டு வெற்றி என்பது இப்பொருட்காட்சியின் தலைப்பாகும். இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு துறைகளும் தரமான பொருட்களும் புதிய ஆய்வு முடிவுகளும் இதில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 46 நாடுகளையும் பிரதேசங்களையும் சேர்ந்த 1500க்கு மேலான தொழில் நிறுவனங்கள் இதில் கலந்துகொண்டுள்ளன. இதில் ரஷியாவின் சுமார் 300 தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த 5000க்கும் மேலான கொள்முதலாளர்கள் கலந்துகொண்டனர்.

You May Also Like

More From Author