கோவில்பட்டிபுத்தகத் திருவிழாவில் திருக்குறள் எழுதிய மாணவர்களுக்குதிருக்குறள் புத்தகம் பரிசு

Estimated read time 0 min read

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பின்புறம் அமைந்துள்ள விஸ்வா மீட்டிங் ஹாலில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில்
திருக்குறள் எழுதிய மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் பரிசுகள் வழங்கப்பட்டது

கோவில்பட்டியில்
மே15ம் தேதி முதல்26ம் தேதி வரை நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் ஓவியப்போட்டி, திருக்குறள் எழுதும் போட்டி,கட்டுரை போட்டிகள் நடைபெற்று வருகிறது.
கோவில்பட்டி புத்தகத்திருவிழாவில் நடந்த திருக்குறள் எழுதும் போட்டியில் ஜி.வி.என் கல்லூரி மாணவி சம்சு ஆஷிபா க்கு முதல் பரிசாக திருக்குருள் புத்தகம்,ரூ500 மதிப்புள்ள புத்தக பரிசு கூப்பனும்,அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி அப்ரின் ஜெஸிமாக்கு 2 ம் பரிசாக திருக்குறள் புத்தகம்,ரூ300 மதிப்புள்ள புத்தக பரிசு கூப்பனும்,எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவி முத்து ஜெயா,அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி முகுந்தா, செல்வராணி ஆகியோருக்கு 3ம் பரிசாக திருக்குறள் புத்தகம், ரூ 200 மதிப்புள்ள புத்தக பரிசு கூப்பனும் வழங்கப்பட்டது.
போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துமுருகன் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்க நிர்வாகிகள் ரவிவர்மா ராஜபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருக்குறள் எழுதும் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவர் சீனிவாசகன் கலந்துகொண்டு புத்தகப் பரிசு கூப்பன் திருக்குறள்புத்தகம் சான்றிதழ்களை வழங்கி பாராட்டி பேசினார்.

இதில் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் முத்துலட்சுமி,மகாலட்சுமி உள்பட வாசகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author