அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப், மே 13ஆம் நாள் முதல் 15ஆம் நாள் வரை சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டார். இப்பயணத்தின் போது சீன மற்றும் அமெரிக்க அரசுத் தலைவர்கள் பெய்ஜிங் மாநகரில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கு முன்னதாக மே 12,13 ஆகிய நாட்களில், சீன-அமெரிக்க பிரதிநிதிக் குழுக்கள், தென் கொரியாவில் கலந்தாய்வு நடத்தி, ஆக்கப்பூர்வமான பொது கருத்துக்களை எட்டின. சீன வணிகத் துறை அமைச்சகத்தைச் சேர்ந்த அமெரிக்க கண்ட மற்றும் மற்றும் ஓஷினியா பிரிவின் பொறுப்பாளர் ஒருவர் 20ஆம் நாள், இரு தரப்புகளுக்கிடையில் பொருளாதார மற்றும் வர்த்தக கலந்தாய்வுக்கான முதற்கட்ட முடிவு குறித்து விபரமாக எடுத்துக் கூறினார். இக்கலந்தாய்வில் சுங்க வரி, வேளாண் வர்த்தகம், அரு மண் ஏற்றுமதிக் கட்டுப்பாடு, விமான வர்த்தகம் உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
சீன-அமெரிக்க பொருளாதார வர்த்தகக் கலந்தாய்வின் முதற்கட்ட முடிவு வெளியீடு
You May Also Like
சீன-கம்போடிய மானிடப் பண்பாட்டியல் பரிமாற்ற நடவடிக்கை
April 18, 2025
அமெரிக்காவின் கடன் பிரச்சினை
June 2, 2023
