அமெரிக்க-ஜப்பானிய கூட்டு இராணுவப் பயிற்சியின் ஒரு பகுதியாக, ஜப்பானில் டைஃபோன் ஆயுத அமைப்பை அமெரிக்கா அமைத்துள்ளது.
இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ஜியான் செப்டம்பர் 16ஆம் நாள் கூறுகையில், அமெரிக்கா மற்றும் ஜப்பான், சீனாவின் கவனத்தைப் பொருட்படுத்தாமல், கூட்டு இராணுவப் பயிற்சியைச் சாக்குப்போக்காக கொண்டு, டைஃபோன் ஆயுத அமைப்பை அமைத்தது குறித்து, சீனா கடும் மனநிறைவின்மையையும், உறுதியான எதிர்ப்பையும் தெரிவித்துள்ளது.
ஆசிய நாடுகளில் அமெரிக்கா டைஃபோன் ஆயுத அமைப்பை அமைப்பது, பிற நாடுகளின் பாதுகாப்பு நலன்களைச் சீர்குலைப்பதோடு, பிரதேச நெடுநோக்கு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றார்.
மேலும், அமெரிக்காவும், ஜப்பானும், பிரதேச நாடுகளின் விருப்பத்தைக் கருத்தில் கொண்டு, தவறான செயலைச் சரி செய்து, டைஃபோன் ஆயுத அமைப்பை வெகுவிரைவில் விலக்கிக்கொள்ள வேண்டும் என சீனா வேண்டுகோள் விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
