சீன அரசு தலைவர் ஷி ச்சின்பிங் 20ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில், சீனாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள ரஷிய அரசு தலைவர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சீன-ரஷிய சுமுக அண்டை நாட்டுறவு மற்றும் நட்பு ஒத்துழைப்புக்கான உடன்படிக்கையைத் தொடர்ந்து நீட்டிக்க இருவரும் ஒப்புக்கொண்டனர்.
ஷி ச்சின்பிங் கூறுகையில், ஐ.நா. பாதுகாப்பவையின் நிரந்தர உறுப்பு நாடுகளாகவும், உலகில் முக்கிய பெரிய நாடுகளாகவும் திகழும் சீனாவும் ரஷியாவும் தொலைநோக்குப் பார்வையுடன் மேலும் உயர்தர பன்முக உத்திநோக்கு ஒத்துழைப்பின் மூலம், மேலும் நியாயமான உலகளாவிய நிர்வாக அமைப்பின் கட்டுமானத்தை ஊக்குவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும், மத்திய கிழக்கு நிலைமை பற்றி ஷி ச்சின்பிங் கூறுகையில், வளைகுடா பிரதேசம், போருக்கும் அமைதிக்கும் இடையிலான முக்கியத் தருணத்தில் உள்ளது என்றார். பன்முகங்களிலும் போரை நிறுத்துவது அவசியமானது. பேச்சுவார்த்தை மேற்கொள்வதில் நிலைத்து நிற்பது முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார். மேலும், சர்வதேச சமூகத்தின் பொது கருத்துக்களை உருவாக்கும் வகையிலும், பதற்றத்தை குறைத்து, போரை நிறுத்துவதற்கு பங்காற்றும் வகையிலும், மத்திய கிழக்கு பகுதியின் அமைதி மற்றும் நிதானத்தைப் பேணிக்காபதற்கான 4 முன்மொழிவுகளை வழங்கியுள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார்.
