தமிழ்நாட்டிலுள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் உபரி நிதியை, தமிழக அரசின் பொதுத்துறை நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய அனுமதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிரடியாக வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை மிகத் தீவிரமாக விசாரித்த உயர் நீதிமன்றம், கோவில் நிதியைத் தமிழ்நாடு அரசின் நிறுவனங்களில் முதலீடு செய்தது குறித்து மத்திய – மாநில அரசுகள், தமிழ்நாடு பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (TNPFC), தமிழ்நாடு டிரான்ஸ்போர்ட் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (TNTDFC) மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆகியவை இன்னும் ஒரு வாரத்திற்குள் விரிவான பதிலளிக்க வேண்டும் என்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
கோவில்களின் உபரி நிதியை அரசின் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு ஆன்மீகப் பெரியவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடையே ஏற்கனவே பலத்த எதிர்ப்புகள் கிளம்பி வந்த நிலையில், தற்போது இந்த விவகாரம் நீதிமன்றப் படியேறியுள்ளது அரசியல் மற்றும் ஆன்மீக வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
நீதிமன்றத்தின் இந்த அதிரடி “ஒன் வீக்” கெடு உத்தரவால், அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அரசுத் தரப்பு தற்போது அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகின்றனர்.
