தமிழகத்தில் பாஜக தனது பலத்தை அதிகரித்து வருவதாக மாநில தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பாஜக தனது பலத்தை அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.
திமுகவை பொருத்தவரை 59 இடங்களில் வென்றுள்ளது; கடந்த தேர்தலை விட
24% குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார். திமுக மதரீதியான வாக்குகளை சேகரித்துக் கொண்டிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமலாக்கத்துறையின் கடிதத்திற்கு உடனடியாக முதலமைச்சர் விஜய் ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும், செந்தில் பாலாஜி விவகாரம் முதலமைச்சர் விஜய்க்கு முதல் பரீட்சை என்றும் நாராயணன் திருப்பதி குறிப்பிட்டுள்ளார்.
