செய்தியாளர்களைச் சந்தித்த சீன-ரஷிய அரசுத் தலைவர்கள்

Estimated read time 1 min read

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும் ரஷிய அரசுத் தலைவர் புத்தினும் மே 20ஆம் நாள் மாலை, பெய்ஜிங்கில் செய்தியாளர்களைக் கூட்டாக சந்தித்தனர்.

அப்போது ஷி ச்சின்பிங் கூறுகையில்,

இது புத்தினின் 25ஆவது சீன பயணம் ஆகும். சீன-ரஷிய உறவின் உயர் நிலையையும் சிறப்புத்தன்மையையும் இது வெளிகாட்டியுள்ளது. சீன-ரஷிய நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளியுறவு நிறுவப்பட்ட 30ஆவது ஆண்டு நிறைவு இவ்வாண்டு ஆகும். நான் மற்றும் புத்தினின் நெடுநோக்கு தலைமையில், இரு நாட்டுறவு புதிய கட்டத்தில் நுழைந்துள்ளது. சீன-ரஷிய உறவின் மேலும் உயர் தரமான வளர்ச்சியை நனவாக்க இருதரப்பும் கூட்டாக முன்னேற்ற வேண்டும். முதலில், மேலும் தரமான அரசியல் நம்பிக்கையையும் ஒன்றுக்கு ஒன்று ஆதரவு அளிப்பதையும் வலுப்படுத்த வேண்டும். மேலும் தரமான ஒத்துழைப்புகளுக்கும் தத்தமது செழுமை வளர்ச்சிக்கும் ஊக்கம் அளிக்க வேண்டும். மேலும் தரமான பொது மக்கள் தொடர்பை முன்னேற்ற வேண்டும். மேலும் தரமான சர்வதேச ஒத்துழைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

You May Also Like

More From Author