தமிழ்நாட்டில் நடப்பாண்டின் முதல் 5 மாதங்களிலேயே வெறிநாய்க்கடியின் வீரியம் மிகக் கொடூரமாக அதிகரித்துள்ளது பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 5 மாதங்களில் மட்டும் மாநிலம் முழுவதும் மொத்தம் 3,25,523 பேர் நாய்க்கடியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதில் கொடுமையாக வெறிநாய்க்கடிக்கு ஆளாகி இதுவரை 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மாவட்ட வாரியாகப் பார்க்கும்போது, அதிகபட்சமாகச் சேலத்தில் 18,905 பேரும், அதற்கு அடுத்தபடியாகத் திருச்சியில் 16,055 பேரும் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். மிகக் குறைந்தபட்சமாக மலைப்பிரதேசமான நீலகிரியில் 1,492 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாய் தொல்லைகளைக் கட்டுப்படுத்தவும், வெறிநாய்க்கடி தடுப்பூசிகளைத் தடையின்றி வழங்கவும் தவெக அரசு உடனடியாகப் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
