தமிழக வெற்றிக்கழகம் அமைச்சரவையை விரிவாக்கம் செய்யாமல் இருக்கும் நிலையில் புதிய அமைச்சர்கள் எப்போது நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
ஏனெனில் அதிமுகவில் ஒரு பிரிவினர் தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவு கொடுத்துள்ள நிலையில் அவர்கள் தமிழக வெற்றிக்கழக அமைச்சரவையில் இடம் பெறுவார்களா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
அதே நேரத்தில் திமுக கூட்டணி கட்சிகள் ஆன விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆதரவு கொடுத்த நிலையில் அவர்களும் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என தமிழக வெற்றி கழகம் தற்போது நேரடியாக அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக பரிசீலனை செய்து முடிவெடுக்கப்படும் என திருமாவளவன் அறிவித்துள்ளார். அதன் பிறகு இன்னும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஐயூஎம்எல் தங்கள் முடிவை அறிவிக்க ஆலோசனை நடைபெறுவதாக தகவல்கள் விரிவாகியுள்ள நிலையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் தங்கள் முடிவை அறிவித்துள்ளார்.
அதன்படி இடதுசாரிகளின் நிலை ஒன்றுதான். மக்களின் தீர்ப்பை தாங்கள் மதித்து ஏற்றுக் கொள்வதாக கூறிய அவர் திமுக கூட்டணியில் தொடர்வதை உறுதிப்படுத்தினார். மேலும் தமிழக வெற்றிக்கழகத்தின் அமைச்சரவையில் நாங்கள் இடம் பெற மாட்டோம் எனவும் வெளியிலிருந்து தான் ஆதரவளிப்போம் என்றும் கூறினார்.
