ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து செய்தி அனுப்பிய சீன-பாதிஸ்தான் அரசுத் தலைவர்கள்

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும் பாகிஸ்தான் அரசுத் தலைவர் சார்தாலியும் 21ஆம் நாள்  இரு நாட்டு தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவையொட்டி ஒருவர் செய்தி அனுப்பினர்.

மலைகள் நதிகளால் இணைந்து பிணைந்துள்ள நேச அண்டை நாடுகளாகவும் இன்பத் துன்பங்களைப் பகிர்ந்து கொண்ட நண்பர்களாகவும் அனைத்து காலங்களிலும் நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளியாகவும் சீனாவும் பாகிஸ்தானும் திகழ்கின்றன. தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 75 ஆண்டுகளில், இரு நாட்டு நட்புறவு கல் போன்று உறுதியானது. உயர் நிலை அரசியல் நம்பிக்கை, நடைமுறை ஒத்துழைப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு, சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றை இரு நாடுகள் நீண்டகாலமாக மேற்கொண்டுள்ளன. சீன-பாகிஸ்தான் உறவின் வளர்ச்சியில் நான் உயர்வாக கவனம் செலுத்துகிறேன். சார்தாலியுடன் இணைந்து, நெடுநோக்கு பரிமாற்றத்தை வலுப்படுத்தி, பன்முக ஒத்துழைப்பை ஆழமாக்கி, புதிய யுகத்தின் மேலும் நெருக்கமான சீன-பாகிஸ்தான் பொது எதிர்கால சமூகத்தைக் கட்டியமைக்க விரும்புகிறேன் என்று இந்த வாழ்த்து செய்தியில் ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author