அமெரிக்கா – இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம் குறித்து டொனால்ட் டிரம்ப் சூசகம்  

Estimated read time 0 min read

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியை தனது “சிறந்த நண்பர்” என்று பாராட்டியுள்ளதுடன், இரு நாடுகளுக்கும் இடையே விரைவில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப்,”எனக்கு உங்கள் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியை மிகவும் பிடிக்கும். அவர் எனது நல்ல நண்பர். நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் நன்றாகப் பழகி வருகிறோம். பல ஆண்டுகளாக இந்தியா அமெரிக்காவிடம் இருந்து அதிக வரிகளை விதித்து வர்த்தக ரீதியாகப் பயனடைந்தது. ஆனால் இப்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. நாங்கள் இந்தியாவுடன் நல்ல லாபகரமான வர்த்தகத்தை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் இரு நாடுகளும் ஒரு சுமுகமான வர்த்தக ஒப்பந்தத்தை எட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

More From Author