புதிய யுகத்தில் ஆழமான சீனச் சீர்திருத்தத்தால் உலகிற்குக் கிடைக்கும் வாய்ப்புகள் எனும் பேச்சுவார்த்தை நிகழ்வும் சீன-எகிப்து பண்பாட்டுப் பரிமாற்ற நடவடிக்கையும் ஜூலை 30ஆம் நாள், கெய்ரோவில் நடைபெற்றன. சீன ஊடகம் குழுமம், எகிப்து சுற்றுலா மற்றும் தொல் பொருள் துறை, எகிப்திலுள்ள சீனத் தூதரகம் ஆகியவை இதனைக் கூட்டாக நடத்தின.
சீன ஊடகக் குழுமத்தின் தலைவர் ஷென் ஹைசியொங் இதில் உரை நிகழ்த்துகையில், சீனா சீர்திருத்தத்தையும் திறப்பையும் ஆழமாக்கி வருவதில் உலகம் கவனம் செலுத்தி வருகிறது. மேலும் பன்முகங்களில் சீர்திருத்தத்தை ஆழமாக்குவது, உலகத்திற்கு உரிய உறுதியான காரணிகளையும் வளர்ச்சி வாய்ப்புகளையும் கொண்டு வரும். மனித குலத்தின் பொது வளர்ச்சிக்கும் செழுமைக்கும் மேலதிகமான சீனாவின் ஆற்றலையும் இது விரைவுபடுத்தும் என்றார் அவர்.
சர்வதேச அளவில் முன்னணியிலுள்ள புதிய ரக செய்தி ஊடகமான சீன ஊடகக் குழுமம், சீன-எகிப்து பண்பாட்டுப் பரிமாற்றம், மக்களுக்கிடையே ஒருவரையொருவர் அறிந்துகொள்வது என்ற மாபெரும் முயற்சியுடன் முன்னேற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.