மியான்மர் அரசுத் தலைவருடன் ஷி ச்சின்பிங் பேச்சுவார்த்தை

Estimated read time 1 min read

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 16ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில், சீனாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள மியான்மர் அரசுத் தலைவர் மின் ஆங் ஹ்லைங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஷி ச்சின்பிங் கூறுகையில், ஆழமான நட்புறவைக் கொண்ட சீனாவும் மியான்மரும், தூதாண்மை உறவு நிறுவப்பட்டதிலிருந்து 76 ஆண்டுகளில் சிரமங்களை ஒன்றாக எதிர்கொண்டு, ஒன்றுக்கொன்று உதவி அளித்து வருகின்றன என்றார். அண்டை நாடுகளுக்கான தூதாண்மையில் மியான்மருடனான உறவின் வளர்ச்சிக்கு சீனா முக்கியத்துவம் அளிக்கிறது. சீனாவின் 15வது ஐந்தாண்டுத் திட்டத்தின் தொடக்க ஆண்டாக நடப்பு ஆண்டில், சீனா தனது வளர்ச்சி அனுபவத்தை மியான்மருடன் பகிர்ந்து கொண்டு, பரஸ்பர அரசியல் நம்பிக்கை, நன்மை பயக்கும் வளர்ச்சி, ஒருங்கிணைந்த பாதுகாப்பு, பரஸ்பர கற்றல் கலாச்சாரம் ஆகியவற்றைக் கொண்ட சீனா-மியான்மர் பொது எதிர்கால சமூகத்தை கூட்டாகக் கட்டியமைப்பதன் மூலம், இருநாட்டு மக்களுக்கும் மேலதிக நன்மைகளை வழங்கவும், பிரதேச அமைதி மற்றும் வளர்ச்சிக்கு மேலதிக பங்களிப்பு அளிக்கவும் மியான்மருடன் இணைந்து பணியாற்ற சீனா விரும்புகிறது என்று தெரிவித்தார்.

மின் ஆங் ஹ்லைங் கூறுகையில், மியான்மரும் சீனாவும் வலுவான நட்பார்ந்த அண்டை கூட்டாளியுறவை உருவாக்கியுள்ளன என்றும், பன்முக ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், பொதுவான வளர்ச்சி மற்றும் செழிப்பை நனவாக்கவும் சீனாவுடன் இணைந்து பணியாற்றும் என்று மியான்மர் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

You May Also Like

More From Author