சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலை தற்போது மீண்டும் குறைந்துள்ளது. இதனால் நகை வாங்க காத்திருந்த பொதுமக்கள் மற்றும் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
குறிப்பாக, கடந்த மே 13ஆம் தேதி ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5000க்கும் அதிகமாக உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின்னர் மே 16ஆம் தேதி தங்கம் விலை கணிசமாக குறைந்தது. தொடர்ந்து சில நாட்களாக விலை மாற்றம் இருந்து வந்த நிலையில், நேற்று மீண்டும் தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டது.
நேற்று (மே 22) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.14,780க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.1,18,240க்கு விற்பனையானது.
இந்த நிலையில், இன்று மேலும் தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.14,730க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,17,840க்கு விற்கப்படுகிறது.
அதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.12,360க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.98,880க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையில், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.295க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,95,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து இரண்டு நாட்களாக தங்கம் விலை குறைந்திருப்பதால், திருமண நிகழ்ச்சிகள் மற்றும் நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இருப்பினும், சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் அமெரிக்க டாலர் மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக வரும் நாட்களில் தங்கம் விலையில் மீண்டும் ஏற்ற இறக்கம் இருக்கலாம் என வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
