ஏபெக் வர்த்தக அமைச்சர்கள் கூட்டத்தில் ஹே லிஃபெங் உரை

சீன துணை தலைமை அமைச்சர் ஹே லிஃபெங் மே 23ஆம் நாள் சீனாவின் சூசோ நகரில் நடைபெற்ற ஏபெக் அமைப்பின் வர்த்தக அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்று உரை நிகழ்த்தினார்.

அவர் கூறுகையில், ஏபெக் அமைப்பின் உறுப்பினர்கள் பரஸ்பர மதிப்பு மற்றும் நம்பிக்கை, ஒத்துழைப்பு மூலம் கூட்டு வெற்றி ஆகிய கருத்துக்களைக் கடைப்பிடித்தால் தான் கூட்டு செழுமையை மேம்படுத்தவும் திறந்த, தரமான, சமமான மற்றும் பாதுகாப்பான வளர்ச்சியை நனவாக்கவும் முடியும் என்றார். மேலும், பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, புதிதாக வளர்ந்து வரும் துறைகளில் பரிமாற்றத்தை வலுப்படுத்தவும், உலக வர்த்தக அமைப்பின் சீர்திருத்தத்தை ஆதரிக்கவும், பிரதேச பொருளாதாரத்தின் ஒருமைப்பாட்டை முன்னேற்றவும் சீனா விரும்புகிறது என்றும், தனது நவீனமயமாக்கத்திலுள்ள புதிய சாதனைகளின் மூலம் ஆசிய-பிசிபிக் மற்றும் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு மேலதிக நேர்மறை ஆற்றலை வழங்கவும் சீனா விரும்புகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

You May Also Like

More From Author