சீனாவில் முழு செயல்பாட்டுக்கு வந்தது ஜெர்மன் இரசாயன நிறுவனம்

Estimated read time 1 min read

தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் ஜெர்மன் இரசாயன நிறுவனமான பி.ஏ.எஸ்.எஃப், தனது பிரம்மாண்டமான உற்பத்தி வளாகத்தை கடந்த வியாழக்கிழமை முழு செயல்பாட்டிற்குக் கொண்டுவந்தது.

சீனாவில் உள்ள ஜெர்மன் நிறுவனத்திற்கு சொந்தமான மிகப்பெரிய ஒற்றை முதலீட்டுத் திட்டம் இது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  குவாங்டாங் மாகாணத்தின் ஜான்ஜியாங் நகரில் சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள முதலீட்டில், கிட்டத்தட்ட 4 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்த ஒருங்கிணைந்த உற்பத்தி வளாகம் அமைக்கப்பட்டுள்ளதாக BASF நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனா தொடர்ந்து திறப்புக் கொள்கையை ஊக்குவித்து வரும் நிலையில், BASF-நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாக தொழில்துறை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வெர்பண்ட் தளம் எனவும் அறியப்படும் இந்த வளாகத்தில் 32 உற்பத்தி வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, போக்குவரத்து, நுகர்வோர் பொருட்கள், மின்னணுப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் தனிநபர் பராமரிப்புத் தொழில்களுக்கான அடிப்படை இரசாயனங்கள், இடைநிலை இரசாயனங்கள் மற்றும் சிறப்பு இரசாயனங்கள் உட்பட 70-க்கும் மேற்பட்ட ரசாயனப் பொருட்கள் இங்கு உற்பத்தி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author