விபத்து ஏற்பட்ட நிலக்கரிச் சுரங்கத்திற்கு சென்ற ஜாங் குவோச்சிங்

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங்கின் முக்கிய உத்தரவு மற்றும் தலைமை அமைச்சர் லி சியாங்கின் கோரிக்கைக்கு இணங்க, அரசவை துணை தலைமை அமைச்சர் ஜாங் குவோச்சிங், 23ஆம் நாள் தொடர்புடைய துறைகளின் பொறுப்பாளர்களுடன், ஷான்சி மாகாணத்தின் சாங்ஜி நகரின் ச்சின்யுவான் மாவட்டத்தில் எரிவாயு வெடிப்பு விபத்து ஏற்பட்ட நிலக்கரிச் சுரங்கம் அமைந்துள்ள இடத்திற்கு சென்று, அவசரகால மீட்புப் பணிகளுக்கு வழிகாட்டினார்.

மருத்துவமனைகளுக்கு சென்ற ஜாங் குவோச்சிங், மீட்புப் பணியாளர்கள் மற்றும் அடிமட்ட ஊழியர்களுக்கு ஷி ச்சின்பிங்கின் முக்கிய உத்தரவுகளையும், காயமடைந்தவர்களுக்கு ஷி ச்சின்பிங்கின் அக்கறையையும் தெரிவித்தார். இதையடுத்து, சம்பவ இடத்திலுள்ள கட்டளை மையத்தில் கூட்டத்தை நடத்தி, மீட்பு, மருத்துவ சிகிச்சை, பாதிக்கப்பட்டோருக்கான ஆறுதல், விபத்திற்கான விசாரணை உள்ளிட்ட பணிகளை ஆராய்ந்து ஏற்பாடு செய்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author