சீனாவில் எட்டப்பட்ட வர்த்தக சாதனைகள் ஏபெக் அமைப்புக்கு ஆற்றலை வழங்கும்

Estimated read time 1 min read

ஏபெக் அமைப்பில் சீனா சேர்ந்த 35ஆம் ஆண்டான நடப்பாண்டில், 3ஆவது முறையாக தலைமை பொறுப்பேற்கும் நாடாக விளங்குகிறது. உலகளாவிய நிலைமையைப் பார்க்கும்போது, பல்வேறு தரப்புகள் ஏன் சீனா மீது பெரும் எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளதைப் புரிந்து கொள்ள முடிகிறது. தற்போதைய உலகில் மாற்றங்களும் குழப்பங்களும் நிறைந்திருக்கின்றன. முக்கிய தருணத்தில், உலகப் பொருளாதாரத்தில் உயிராற்றல் மிக்க ஆசிய-பசிபிக் பிரதேசத்திலுள்ள 21 பொருளாதாரச் சமூகங்கள் ஒன்றுகூடி, பலதரப்பு மற்றும் பிரதேச பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு பற்றி விவாதம் நடத்தி, ஓர் கூட்டறிக்கை, சேவை துறைக்கான ஒரு புதிய வரைப்படம் உள்ளடக்கிய சாதனையை எட்டியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது.

ஆசிய-பசிபிக் குடும்பத்தில் முக்கிய உறுப்பினராக இருக்கும் சீனா, பல்வேறு துறைகளிலான ஏபெக் ஒத்துழைப்பில் ஆக்கப்பூர்வமாக பங்கெடுத்து வருகிறது. ஏபெக் அமைப்பில் சீனா தலைவர் பதவி ஏற்கும் நடப்பாண்டில், திறப்பு, புத்தாக்கம், ஒத்துழைப்பு ஆகியவை முன்னுரிமை அளிக்கப்படும் 3 துறைகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. நடப்பு ஏபெக் வர்த்தக அமைச்சர்கள் கூட்டத்தின் சாதனையில் சீனாவின் முன்மொழிவுகளும் கருத்துக்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இது ஏபெக் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக்கு புதிய இயக்காற்றலை வழங்குவதோடு, சீனா தனது நவீனமயமாக்கத்தின் புதிய சாதனைகளைப் பயன்படுத்தி ஆசிய-பசிபிக் மற்றும் உலகப் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் விருப்பத்தையும் பொறுப்பையும் வெளிக்காட்டியுள்ளது.

இந்த ஆண்டில் சீனா ஆசிய-பசிபிக் பிரதேசத்திலுள்ள அனைத்து பொருளாதார சமூகங்களுடனும் வாய்ப்புகளைப் பகிர்ந்து கூட்டு வெற்றியை நனவாக்கும் அதேவேளை, ஆண்டின் இறுதியில் ஷென்சென் நகரில் நடைபெறும் ஏபெக் அமைப்பின் பொருளாதார தலைவர்கள் கூட்டத்துக்கு உறுதியான அடித்தளமிட்டு, ஆசிய-பசிபிக் பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்துக்கு நிரந்தர இயக்காற்றலை வழங்கும்.

Please follow and like us:

You May Also Like

More From Author