சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மே 25ஆம் நாள் பெய்ஜிங்கில் செர்பிய அரசுத் தலைவர் அலெக்டாண்டர் வுசிச்-உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஷிச்சின்பிங் கூறுகையில், கடந்த இரு ஆண்டுகளில் சீனா-செர்பியா பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்தில் ஆக்கப்பூர்வ முன்னேற்றம் அடைந்து, இருநாட்டு மக்களுக்கு நன்மைபுரியும் அதேவேளை நாடுகளுக்கிடையே உறவுகளுக்கு முன்மாதிரியை நிலைநாட்டியுள்ளது என்றார். சீனாவும் செர்பியாவும் தொடர்புகளை அதிகரித்து, பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்தி, ஒத்துழைப்பை ஆழமாக்கி, ஒன்றுக்கொன்று ஆதரவளித்து, கூட்டு செழுமைக்கான பாதையில் இணைந்து முன்னேறி, சீனா-செர்பியா பன்முக உத்திநோக்கு கூட்டுறவை புதிய நிலைக்கு முன்னெடுத்து செல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார்.
சீனா-செர்பியா நட்புறவு தனித்துவம் வாய்ந்தது. தனது நிலைமைக்கு ஏற்ற வளர்ச்சிப் பாதையை செர்பியா தெரிவு செய்ய ஆதரவளிக்கும் சீனா, செர்பியாவுடன் ஆட்சிமுறை அனுபவங்களின் பரிமாற்றத்தை வலுப்படுத்த விரும்புகிறது. இருநாடுகள் வளர்ச்சி திட்டங்களின் இணைப்பை வலுப்படுத்தவும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கூட்டு கட்டுமானத்துக்கான இடைகால செயல்திட்டத்தை சீராக நடைமுறைப்படுத்தவும், எரியாற்றல், போக்குவரத்து உள்ளிட்ட துறைகளிலான ஒத்துழைப்புகளைத் தொடர்ந்து முன்னேற்றவும் வேண்டும். சர்வதேச விவகாரங்களில் இருநாடுகள் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, உண்மையான பலதரப்புவாதத்தை செயல்படுத்த வேண்டும்.
15ஆவது ஐந்தாண்டு திட்டத்தை வகுத்து செயல்படுத்தும் சீனாவுக்கு பாராட்டு தெரிவித்த வுசிச், அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் தலைமையில் சீனா மேலும் பெரும் வளர்ச்சி சாதனைகளைப் பெறும் என நம்புவதாகத் தெரிவித்தார். சீனாவுடனான உறவின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் செர்பியா, சீனாவின் மைய நலனுக்கு உறுதியுடன் ஆதரவளிக்கிறது. அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த முக்கியமான உலகளாவிய முன்மொழிவுகளுக்கும் ஆதரவளிக்கிறது என்றும் அவர் கூறினார்.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு, 20க்கும் மேற்பட்ட ஒத்துழைப்பு ஆவணங்களில் கையொப்பமிடும் விழாவில் அவர்கள் கலந்து கொண்டனர். மேலும், புதிய யுகத்துக்கு சீனா-செர்பியா பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்தை தொடர்ந்து முன்னேற்றுவது பற்றிய கூட்டறிக்கையையும், 4 உலகளாவிய முன்மொழிவுகளின் நடைமுறையாக்கத்தை கூட்டாக மேம்படுத்துவது பற்றிய கூட்டறிக்கையையும் இருநாடுகள் வெளியிட்டன.
