இது குறித்து சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மே 7ஆம் நாள் கூறுகையில், அமெரிக்காவின் புதிய அரசு மேற்கொண்ட நியாயமற்ற ஒரு தரப்பான சுங்க வரி விதிப்பு, சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக உறவையும், சர்வதேச பொருளாதார மற்றும் வர்த்தக ஒழுங்கையும் கடுமையாக சீர்குலைத்துள்ளன. இதற்கான எதிர் நடவடிக்கைகளை சீனா உறுதியுடன் மேற்கொண்டுள்ளது. அண்மையில், சுங்க வரி விதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக அமெரிக்கா தகவல் வெளியிட்டது. அமெரிக்காவின் தகவல்களை கவனமாக மதிப்பிட்ட பிறகு, உலகளாவிய எதிர்பார்ப்புகள், சீனாவின் நலன்கள், அமெரிக்காவின் பல்வேறு துறையினர்கள் மற்றும் நுகர்வோரின் வேண்டுகோள் முதலியவற்றைக் கருத்தில் கொண்டு, அமெரிக்காவுடன் தொடர்பு கொள்ள சீனா ஒப்புக்கொண்டுள்ளது என்றார்.
மேலும், சீனா, தனது சொந்த வளர்ச்சி மற்றும் நலன்களைப் பேணிக்காப்பதற்கான மனவுறுதி மாறாது. சர்வதேச நியாயம் மற்றும் நேர்மையையும், பொருளாதார மற்றும் வர்த்தக ஒழுங்கையும் பேணிக்காப்பதற்கான நிலைப்பாடு மாறாது. எந்தப் பேச்சுவார்த்தையும், ஒன்றுக்கொன்று மதிப்பு மற்றும் சமத்துவமான கலந்தாய்வின் அடிப்படையில் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரவித்தார்.