சீன வணிகத் துறைத் துணை அமைச்சரும் சர்வதேச வணிக பேச்சுவார்த்தைக்கான துணை பிரதிநிதியுமான லிங்ஜி 6ஆம் நாள் அமெரிக்க முதலீட்டு நிறுவனங்களின் வட்ட மேசை மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார்.
டெஸ்லா, ஜியீ ஹெல்த்கேர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட அமெரிக்க முதலீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்திலும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கான பாதுகாப்பான மற்றும் நம்பிக்கைக்குரிய இடமாகச் சீனா திகழ்கிறது என்று லிங்ஜி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், கடந்த சில நாட்களில், அமெரிக்கா பல்வேறு சாக்குபோக்குகளில் அனைத்து வர்த்தக கூட்டாளிகளின் மீது தவறான முறையில் சுங்க வரி வசூலிப்பை அறிவித்துள்ளது. விதிகளின் அடிப்படையிலான பலதரப்பு வர்த்தக அமைப்பு முறையைக் கடுமையாகப் பாதித்துள்ளதோடு, பல்வேறு நாடுகளின் நியாயமான உரிமை நலனையும் அமெரிக்கா கடுமையாக மீறியுள்ளது.
இது குறித்து அமெரிக்க முதலீட்டு நிறுவனங்கள் ஊற்றுமூலத்தைத் தேடி காரணத்தையும் விளைவையும் தெளிவுபடுத்தி பகுத்தறிவு முறையில் குரல் எழுப்பி உலக உற்பத்தி மற்றும் விநியோக சங்கிலியின் நிதானத்தைக் கூட்டாகப் பேணிக்காக்கவும், ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றியை முன்னேற்றவும் பாடுபட வேண்டுமென அவர் விருப்பம் தெரிவித்தார்.