2026 உலக ஸ்மார்ட் தொழில் பொருட்காட்சி, மே 28ஆம் நாள் முதல் 31ஆம் நாள் வரை, தியன் சின் மாநகரில் நடைபெறுகிறது. இதில், பன்நோக்கு அரங்கு, செயற்கை நுண்ணறிவுக்கான முக்கியத் தொழில் நுட்பம், எம்பொதிட் நுண்ணறிவு, ஸ்மார்ட் வாழ்க்கை முதலிய 6 காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டன. உலகளவில் செயற்கை நுண்ணறிவு அறிவியல் துறையின் முன்னணி புத்தாக்கத் தொழில் நுட்பங்கள், நவீனமான உற்பத்திப் பொருட்கள் மற்றும் சாதனைகள் முதலியவை இதில் முழுமையாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
உலகளவில் முன்னணியிலுள்ள 500 தொழில் நிறுவனங்களுள் 28 தொழில் நிறுவனங்கள், சீனாவில் முன்னணியிலுள்ள 500 தொழில் நிறுவனங்களுள் 37 தொழில் நிறுவனங்கள் உள்பட செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஈடுபடும் 400க்கும் மேலான நிறுவனங்கள் இதில் பங்கெடுகின்றன.
