நிறைவடையவுள்ள 2024ஆம் ஆண்டு மனித குல வரலாற்றின் வளர்ச்சிப் போக்கில் ஒரு அசாதாரண முக்கிய அடையாளத்தைப் பதித்துள்ளதாகச் சர்வதேச பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இவ்வாண்டில், பலதரப்புவாதத்தை நடைமுறைப்படுத்துவதில் சீனா உறுதியாக ஊன்றி நின்றுள்ளது. சர்வதேச ஒத்துழைப்பை ஆக்கப்பூர்வமாக முன்னேற்றி, “தெற்கு வளர்ச்சி”யை முழு மூச்சுடன் ஆதரவளித்து பதற்ற நிலையில் சிக்கியுள்ள உலகத்துக்கு அரிய மிக்க நிலைப்புத் தன்மை மற்றும் உறுதித் தன்மையை சீனா வழங்கியுள்ளது.
2024ஆம் ஆண்டில், கூட்டு, பன்னோக்கம், ஒத்துழைப்பு மற்றும் தொடரவல்ல கூடிய புதிய பாதுகாப்புக் கண்ணோட்டத்தைச் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பலதரப்புவாத சந்திப்புகளில் முன்மொழிந்து உலக பாதுகாப்பு முன்னெடுப்பை ஆக்கப்பூர்வமாக முன்னேற்றினார்.
நவம்பரில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டில், பொருளாதாரம், நிதி, வர்த்தகம், எண்ணியல், உயிரினம், பாதுகாப்பு முதலிய துறைகளின் நிர்வாகத்தை மேம்படுத்துவதில் சீனா, விரிவான முன்மொழிவுகளை முன்வைத்தது.
ஒத்துழைப்பு, நிலைப்புத் தன்மை, திறப்பு, புத்தாக்கம் மற்றும் உயிரின நட்புடன் கூடிய உலகப் பொருளாதாரத்தைக் கட்டியமைக்க வேண்டுமென சீனா வலியுறுத்தியுள்ளது. இது உலகப் பொருளாதார நிர்வாகத்தின் மேம்பாட்டுக்கு விரிவான திட்டத்தை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒன்றுக்கொன்று நன்மை, கூட்டு வெற்றி மற்றும் கூட்டு செழுமையான நடைமுறையாக்க வழியைச் சீனா சொந்த செயலின் மூலம் உலகத்துக்குக் காட்டியுள்ளது. சீனப் பாணி நவீனமயமாக்கலின் மூலம், அமைதி வளர்ச்சி, ஒன்றுக்கொன்று நன்மை தரும் ஒத்துழைப்பு மற்றும் கூட்டு செழுமையான உலக பன்னாடுகளின் நவீனமயமாக்கலைச் சீனா முன்னேற்றி வருகிறது.