பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்திற்காக தேசிய நெடுஞ்சாலைகளில் வசதிகளை மேம்படுத்துவதற்காக ஹம்சஃபர் கொள்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டார்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளில் சுத்தமான கழிப்பறைகள், குழந்தை பராமரிப்பு அறைகள் மற்றும் எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிலையங்கள் போன்ற அத்தியாவசிய வசதிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட லட்சியமான ஹம்சஃபர் கொள்கையை கடந்த செவ்வாயன்று (அக்டோபர் 8) அன்று தொடங்கி வைத்தார்.
இந்த முயற்சியானது பயணிகளுக்கு பயண அனுபவத்தை மேம்படுத்த முயல்கிறது.
தூய்மையான கழிப்பறைகள், குழந்தை பராமரிப்பு அறைகள், சக்கர நாற்காலிகளுக்கான ஏற்பாடுகள், வாகன நிறுத்துமிடங்கள், எரிபொருள் நிலையங்களில் தங்குமிட சேவைகள் மற்றும் பலவற்றை அறிமுகப்படுத்துவது கொள்கையில் அடங்கும்.