தொலைத்தொடர்பு, மருத்துவத் துறையில் திறந்த நிலையை விரிவுபடுத்தும் சீனா
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், பிரான்ஸ் அரசுத் தலைவர் இம்மானுவேல் மக்ரோனுடன் மே 6-ஆம் நாளிரவில் சீன-பிரான்ஸ் தொழில் முனைவோர் மன்றத்தின் 6-ஆவது கூட்டத்தின் நிறைவு விழாவில் பங்கேற்று உரை நிகழ்த்தினார்.
அப்போது பேசிய அவர்,
தொலைத் தொடர்பு, மருத்துவம் ஆகிய சேவைத் துறைகளில் சீனா தற்சார்பாக திறப்பு நிலையை விரிவாக்கி வருகிறது. இதன் மூலம் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட உலக நாடுகளின் நிறுவனங்களுக்கு மேலதிக சந்தை வாய்ப்புகள் உருவாகும் என்று ஷிச்சின்பிங் கூறினார்.
மேலும், பிரான்ஸ் உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்நத் குடிமக்கள் குறுகிய காலத்தில் சீனாவில் பயணிப்பதற்கான விசா விலக்குக் கொள்கையை 2025-ஆம் ஆண்டின் இறுதி வரை நீடிக்க சீனா முடிவெடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.