சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும், அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் டிசம்பர் 2ஆம் நாள் “ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின்” கட்டுமானம் பற்றிய நான்காவது பணிக்கூட்டத்தில் கலந்து கொண்டு முக்கிய உரை நிகழ்த்தினார்.
தற்போதைய கடினமான மற்றும் சிக்கலான சர்வதேச சூழ்நிலையில், “ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின்” கூட்டு கட்டுமானத்தின் உயர் தர வளர்ச்சியை முன்னேற்றுவதில் வாய்ப்புகளும் அறைகூவல்களும் கூட்டாக நிலவுகின்றன.
ஆனால் பொதுவாக கூறினால், அறைகூவல்களை விட வாய்ப்புகள் அதிகம். நெடுநோக்கு தன்னம்பிக்கையை அதிகரித்து, பொறுப்புணர்வுடன் செயல்பட்டு, “ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின்” கூட்டு கட்டுமானத்திற்கான மேலும் ஒளிவீசும் எதிர்காலத்தைத் திறந்து வைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஷிச்சின்பிங் கூறுகையில், 2013ஆம் ஆண்டு “ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின்” கூட்டு கட்டுமானம் பற்றிய ஆலோசனை முன்வைக்கப்பட்டது. இதற்கு பின் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் தலைமையில், பல்வேறு தரப்புகளின் கூட்டு முயற்சிகளின் மூலம், “ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின்” கூட்டு கட்டுமானம், முக்கிய சாதனைகளைப் பெற்று, கூட்டு கட்டுமானத்தில் பங்கெடுத்த நாடுகளுக்கிடையேயான நட்புறவை அதிகரிப்பதற்கும், அந்நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும் பங்காற்றியுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.
மேலும், “ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின்” கூட்டு கட்டுமானம், உயர் தர வளர்ச்சியின் புதிய காலக் கட்டத்தில் நுழைந்துள்ளது. புதிய வளர்ச்சி கண்ணோட்டத்தை சீராகவும் பன்முகங்களிலும் செயல்படுத்தி, புதிய வளர்ச்சி கட்டமைப்பை விரைவாக உருவாக்கி, தொடரவல்ல வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பல்வகை அபாயங்களையும் அறைகூவல்களையும் வென்றெடுத்து, “ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின்” கூட்டு கட்டுமானத்தின் உயர் தர வளர்ச்சியை உறுதியுடன் முன்னேற்றி, மனித குலத்தின் பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்தை முன்னேற்றுவதற்கு மேலதிக பங்காற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.