135ஆவது சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதிப் பொருட்காட்சி துவக்கம்

135ஆவது சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதிப் பொருட்காட்சி ஏப்ரல் 15ஆம் நாள் குவாங் ச்சோ நகரில் துவங்கியது.

நடப்புப் பொருட்காட்சியில் பங்கேற்ற தொழில்நிறுவனங்களின் எண்ணிக்கை 29ஆயிரத்தை எட்டியுள்ளது. அவற்றில் ஏற்றுமதிப் பொருட்காட்சியில் 28ஆயிரத்து 600 நிறுவனங்கள் பங்கேற்றன. இறக்குமதிப் பொருட்காட்சியில் 50நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 680 பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

அவற்றுள், 64விழுக்காடு நிறுவனங்கள் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்னெடுப்பில் கலந்து கொண்ட நாடுகளைச் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.
13ஆம் நாள் வரை, 215 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சத்து 44ஆயிரம் வெளிநாட்டு வணிகர்கள் நடப்புப் பொருட்காட்சியில் முன்பதிவு செய்துள்ளனர்.

மேலும், 288 முன்னணி நிறுவனங்களும், தொழில் மற்றும் வணிக நிறுவனங்களும் நடப்புப் பொருட்காட்சியில் குழுவாகக் கலந்து கொள்வதை உறுதிப்படுத்தியுள்ளன.

You May Also Like

More From Author