கோயில் திருவிழாவில் தேர் சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலி..!!

Estimated read time 0 min read

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேர் திருவிழாவில் சோக சம்பவம் நிகழ்ந்தது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்தனர். இப்படி இருக்கையில், இந்த விபத்து நடந்திருக்கிறது.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், “திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் வைகாசி விசாகத்தை ஒட்டி நடந்த தேரோட்டத்தின் போது, தேர் திரும்புகையில் சக்கரத்திற்கும் சுவற்றுக்கும் இடையில் சிக்கிய இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பலத்த காயமடைந்த கல்லூரி மாணவன் சஷ்டிகன் (19) மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்.

You May Also Like

More From Author