நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) வழியாக இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள் மீண்டும் ரோந்துப் பணியைத் தொடங்கியுள்ளனர்.
2020இல் நடந்த ஒரு பெரிய மோதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பதற்றம் நீடித்து வந்த நிலையில், இது மிகப்பெரிய முன்னேற்றமாகும்.
முன்னதாக, கடந்த வாரம் எட்டப்பட்ட ராணுவ அமைதி ஒப்பந்தத்தின்படி, வியாழன் (அக்டோபர் 31) அன்று டெப்சாங் மற்றும் டெம்சோக் பகுதிகளில் ரோந்து பணி தொடங்கியது.
வீரர்கள் குறைப்பு செயல்முறை புதன்கிழமை நிறைவடைந்ததாக இந்திய ராணுவ வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்த செயல்முறை இரு படைகளும் கூட்டாக தங்கள் துருப்புக்களை திரும்பப் பெறுவதை சரிபார்ப்பது மற்றும் இராணுவ உள்கட்டமைப்பை அகற்றுவதை உள்ளடக்கியது ஆகும்.