கால்பந்து போட்டி வெற்றிக் கொண்டாட்டத்தில் பயங்கரம்..   

Estimated read time 1 min read

புடாபெஸ்ட்டில் நடைபெற்ற விறுவிறுப்பான சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில், பெனால்டி ஷூட்-அவுட் முறையில் ஆர்சனல் அணியை 4-3 என்ற கணக்கில் வீழ்த்தி பிஎஸ்ஜி கால்பந்து அணி சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டது.
இந்த வரலாற்று வெற்றியைத் தொடர்ந்து பாரீஸின் மையப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வேளையில், திடீரென வன்முறை வெடித்தது.
மறுநாள் காலை நிலவரப்படி, இந்த கலவரத்தில் சிக்கி ஒருவர் பலியாகியுள்ளார், 264க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டுள்ளன மற்றும் 780-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புகழ்பெற்ற சாம்ப்ஸ்-எலிசீஸ் பகுதியில் திரண்ட 20,000க்கும் மேற்பட்ட ரசிகர்களால் மின்சார பைக்குகள் எரிக்கப்பட்டு, கடைகளின் முகப்புகளும் கடுமையாக சேதப்படுத்தப்பட்டன.

You May Also Like

More From Author