சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜூலை 3ஆம் நாள் பிற்பகல் அஸ்தானாவில் கிர்கிஸ்தான் அரசுத் தலைவர் ட்சாபாரோவைச் சந்தித்துரையாடினார்.
ஷிச்சின்பிங் கூறுகையில் கடந்த ஆண்டு மே திங்கள் நாங்கள் சி ஆன் நகரில் பயன்மிக்க பேச்சுவார்த்தை நடத்தி, இரு நாட்டுறவு பற்றியும் பல்வேறு துறைகளில் இரு நாட்டு ஒத்துழைப்புகள் பற்றியும் பல பொது கருத்துக்களை எட்டினோம். கடந்த ஓராண்டுக்கு மேலாக, இந்த பொது கருத்துக்கள் பயனுள்ள முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளன.
தங்கள் தலைமையில், நாட்டின் நிலைமைக்குப் ஏற்ற வெற்றிகரமான வளர்ச்சிப் பாதையில் கிர்கிஸ்தான் முன்னேறுவதை சீனா உறுதியுடன் ஆதரித்து, எந்த சக்தியும் எந்த சாக்குப்போக்கிலும் கிர்கிஸ்தானின் உள் விவகாரத்தில் தலையிடுவதை உறுதியுடன் எதிர்க்கிறது.
கிர்கிஸ்தானுடன் இணைந்து தத்தமது நாட்டின் வளர்ச்சி நெடுநோக்கு திட்டங்களை இணைத்து, ஆட்சி முறை பற்றிய அனுபவங்களைப் பரிமாறிக் கொண்டு, ஒன்றுக்கொன்று நன்மை பயக்கும் ஒத்துழைப்பை பன்முகங்களிலும் முன்னேற்ற சீனா விரும்புவதாக சுட்டிக்காட்டினார்.