தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்..!

Estimated read time 0 min read

தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின்படி மாவட்ட அளவில் நடைபெறும் அரசுத் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை கண்காணித்து விரைவுபடுத்துவதற்காக அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி,

  • ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் – விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா – சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம்
  • உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் பி. வெங்கடரமணன் – மயிலாடுதுறை மாவட்டம்
  • செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் ரா. குமார் – திருவள்ளூர் மாவட்டம்
  • நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் நெ. மரிய வில்சன் – திருநெல்வேலி மாவட்டம்
  • பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் – பெரம்பலூர் மாவட்டம்
  • வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் க. தென்னரசு – காஞ்சிபுரம் மாவட்டம்
  • வனத்துறை அமைச்சர் ஆர்.வி. ரஞ்சித்குமார் – திருப்பத்தூர் மாவட்டம்
  • மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் த. சரத்குமார் – செங்கல்பட்டு மாவட்டம்
  • சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு – கள்ளக்குறிச்சி மாவட்டம்
  • கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் – ராணிப்பேட்டை மாவட்டம்
  • வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்குமார் – தருமபுரி மற்றும் அரியலூர் மாவட்டம்
  • சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம். ஷாஜகான் – நாகப்பட்டினம் மாவட்டம்
  • வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் – தஞ்சாவூர் மாவட்டம்
  • இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் – திருச்சி மாவட்டம்
  • பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி. விஜயலஷ்மி – கரூர் மாவட்டம்
  • வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் – நாமக்கல் மாவட்டம்
  • மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் – திருப்பூர் மாவட்டம்
  • கால்நடைத்துறை அமைச்சர் செ. கமலி – நீலகிரி மாவட்டம்
  • கைத்தறி, துணிநூல் மற்றும் காதித்துறை அமைச்சர் ம. விஜய் பாலாஜி – வேலூர்
  • வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் – ஈரோடு மாவட்டம்
  • பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் – கோவை மாவட்டம்
  • எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஆர். நிர்மல்குமார் – மதுரை மற்றும் தேனி மாவட்டங்கள்
  • தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் – புதுக்கோட்டை மாவட்டம்
  • இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு – சிவகங்கை மாவட்டம்
  • தொழில்துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா – கிருஷ்ணகிரி மாவட்டம்
  • சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கு. ஜெகதீஸ்வரி – விருதுநகர் மாவட்டம்
  • உயர்கல்வித்துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் – திருவாரூர் மாவட்டம்
  • மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் – தூத்துக்குடி மாவட்டம்
  • குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ. மதன் ராஜா – ராமநாதபுரம் மாவட்டம்
  • போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் – சேலம் மாவட்டம்
  • சுற்றுலாத்துறை அமைச்சர் செ. ராஜேஷ்குமார் – கன்னியாகுமரி மாவட்டம்
  • சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் ராஜீவ் – தென்காசி மாவட்டம்
  • மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் – திண்டுக்கல் மாவட்டம்

பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளுடன் இணைந்து வளர்ச்சித் திட்டங்களை துரிதப்படுத்துதல், நலத்திட்ட உதவிகள் மக்களை சென்றடைவதை உறுதி செய்தல், பேரிடர் காலங்களில் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என அரசு அறிவுறுத்தியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author