தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஜூலை 21 ஆம் தேதி தனது வழக்கமான காலை நடைப்பயணத்தின் போது ஏற்பட்ட தலைச்சுற்றலைத் தொடர்ந்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில், வியாழக்கிழமை (ஜூலை 24) வெற்றிகரமாக இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
முன்னதாக, அவரது இதய துடிப்பில் சிறிய வேறுபாடுகள் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்தனர்.
அவை அவரது அறிகுறிகளுக்கான காரணம் என அடையாளம் காணப்பட்டது.
அப்பல்லோ மருத்துவமனை தற்போது வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, இருதயநோய் நிபுணர் டாக்டர் ஜி.செங்குட்டுவேலு தலைமையிலான நிபுணர்கள் குழுவின் பரிந்துரையின்படி, வியாழக்கிழமை காலை இதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், ஆஞ்சியோகிராஃபிக் பரிசோதனையில் அவர் இயல்பாக உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலினின் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை
