ஷி ச்சின்பிங் ரஷிய அரசு தலைவருடன் காணொளி சந்திப்பு

Estimated read time 0 min read

பிப்ரவரி 4ஆம் நாள் மாலை பெய்ஜிங் மக்கள் மகாமண்டபத்தில், சீன அரசு தலைவர் ஷி ச்சின்பிங் ரஷிய அரசு தலைவர் புதினுடன் காணொளி வாயிலாக சந்திப்பை நடத்தினார்.

இவ்வாண்டு சீனாவின் 15வது ஐந்தாண்டுத் திட்டத்தின் தொடக்க ஆண்டாகும். சீனா உயர்நிலை திறப்பை மேலும் ஆக்கப்பூர்வமாக விரிவுபடுத்தி, ரஷியா உள்ளிட்ட உலகின் அனைத்து நாடுகளுடனும் புதிய வளர்ச்சி வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் என்று ஷி ச்சின்பிங் வலியுறுத்தினார். மேலும், பொறுப்புள்ள பெரிய நாடுகளாகவும், ஐ.நா. பாதுகாப்பவையின் நிரந்தர உறுப்பு நாடுகளாகவும், சர்வதேச சமூகம் நியாயம் மற்றும் நீதியை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும், உலகளாவிய உத்திநோக்கு நிலைத்தன்மையை கூட்டாகப் பேணிக்காக்கவும், சீனா மற்றும் ரஷியாவுக்கு கடமை உண்டு என்றும் தெரிவித்தார்.

புதின் கூறுகையில், சிக்கலான மற்றும் மாறி வரும் சர்வதேச நிலைமையை எதிர்கொண்டு, ஐ.நா., ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, பிரிக்ஸ் உள்ளிட்ட பலதரப்பு தளங்களில் சீனாவுடன் உத்திநோக்கு ஒத்துழைப்பை தொடர்ந்து வலுப்படுத்தி, சர்வதேச விவகாரங்களில் நேர்மறையான ஆற்றலை செலுத்த ரஷியா விரும்புவதாக என்றார். மேலும், ஷென்செனில் நடைபெறும் ஏபெக் தலைவர்களின் முறைசாரா கூட்டத்தை நடத்துவதில் சீனாவை ரஷியா ஆக்கப்பூர்வமாக ஆதரிக்கும் என்றும் தெரிவித்தார்.

பொது அக்கறை கொண்ட சர்வதேச மற்றும் பிரதேச முக்கிய பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் ஆழமாக கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

You May Also Like

More From Author