ஏபெக் என்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 33ஆவது தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற உச்சிமாநாடு நடைபெறும் முன்னிட்டு, சீனாவின் ஷென்சென் நுழைவாயில் மூலம் எல்லைக் கடந்த பயணிகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. ஷென்சென் எல்லைச் சோதனை நிலையத்தின் புள்ளிவிவரங்களின்படி, ஆகஸ்ட் 4ஆம் நாள் வரை, ஷென்சென் நுழைவாயிலின் மூலம் எல்லைக் கடந்த பயணங்களின் எண்ணிக்கை 50லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இவ்வாண்டு முதல், சீனாவின் விசா விலக்கு கொள்கைகள் விரிவாகியுள்ளதோடு, ஷென்சென் நகரிலுள்ள பல்வேறு நுழைவாயிலின் மூலமான எல்லைக் கடந்த பயணங்களின் எண்ணிக்கைகள் புதிய பதிவை உருவாக்கியுள்ளன. அவற்றில், விசா விலக்குக் கொள்கை மூலம் ஷென்சென் நுழைவாயிலின் மூலம் சீனாவுக்கு வருகை தந்த வெளிநாட்டவர்களின் பயணங்கள் 12லட்சத்து 69ஆயிரத்தை எட்டியுள்ளது. சீனாவுக்கு வருகை புரிந்த மொத்த வெளிநாட்டவர்களின் பயணங்களில் 50.9விழுக்காட்டை இது வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
