நகர்ப்புறப் புதுப்பிப்பை ஒருங்கிணைந்த முறையில் முன்னேற்றும் சீனா

Estimated read time 1 min read

15ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில், நகர்ப்புறப் புதுப்பிப்புக்கான ஆதரவை சீனா தொடர்ந்து அதிகரித்து, திட்டப்பணிகளுக்கான முதலீட்டையும் அமைப்புமுறையின் கட்டுமானத்தையும் ஒருங்கிணைந்த முறையில் முன்னேற்றி வருவதாக, தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் பொறுப்பாளர் ஒருவர் ஜுன் 8ஆம் நடைபெற்ற சீன அரசவையின் கொள்கை அறிமுகக் கூட்டத்தில் தெரிவித்தார்.

மத்திய வரவு-செலவுத் திட்டத்திலான முதலீட்டின் மூலம், இவ்வாண்டில் நிதி ஒதுக்கீட்டு அளவு 9700 கோடி யுவானாகும். இதன் மூலம் 80 லட்சம் குடும்பங்கள் பயனடைய உள்ளன. இதனிடையே, நாட்டின் முக்கிய உத்திப்பூர்வ திட்டங்களின் நடைமுறையாக்கம், முக்கிய துறைகளில் பாதுகாப்பு திறன் கட்டுமானம் ஆகிய இரு பணிகளுக்கான ஏற்பாட்டின் கீழ், 16 ஆயிரம் கோடி யுவான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2500 கோடி யுவான் அதிகம். அடுத்த கட்டத்தில், தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம், நகர்ப்புற புதுப்பிப்புக்கான 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் நடைமுறையாக்கத்தை முக்கிய பணியாக கொண்டு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author