ஐ.நா. சாசனத்தையும் சர்வதேச சட்ட ஆட்சியையும் பேணிக்காக்க வேண்டும்: உலகளாவிய நிர்வாக நண்பர்கள் குழு

ஐ.நா. சாசனம் மற்றும் ஐ.நாவின் பங்கை வலுப்படுத்துதல் குறித்த சிறப்புக் கமிட்டியின் 2026ஆம் ஆண்டு வருடாந்திர கூட்டத்தில், உலகளாவிய நிர்வாக நண்பர்கள் குழுவின் 49 உறுப்பினர்களின் சார்பில் ஐ.நாவுக்கான சீனாவின் நிரந்தர பிரதிநிதி ஃபூ சோங் 18ஆம் நாள் வெளியிட்ட கூட்டறிக்கையில், ஐ.நா. சாசனத்தையும் சர்வதேச சட்ட ஆட்சியையும் பேணிக்காக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஐ.நா. சாசனம் என்பது சர்வதேச உறவுகளைக் கையாள்வதற்கான அடிப்படை வழிகாட்டல் என்றும், அனைத்து நாடுகளும் ஒன்றையொன்று மதிக்கவும், அமைதியாக வாழவும், சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் சர்வதேச ஒழுங்கை கூட்டாகப் பாதுகாக்கவும் வேண்டும் என்றும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உண்மையான பலதரப்புவாதத்தைச் செயல்படுத்தி ஒருதரப்பு தடைகளை எதிர்க்க வேண்டும் என்று இக்கூட்டறிக்கை வலியுறுத்தியது. சர்வதேச விவகாரங்களில் ஐ.நாவின் மையப் பங்கை ஆதரிக்கவும், மேலும் நியாயமான மற்றும் சமமான உலகளாவிய நிர்வாக அமைப்பின் கட்டுமானத்தை ஊக்குவிக்கவும், உலகளாவிய நிர்வாக நண்பர்கள் குழு அனைத்து தரப்பினருடனும் இணைந்து பணியாற்றும் என்றும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author