ஜப்பான் தலைமை அமைச்சர் தகைச்சி சனே அண்மையில் தைவான் தொடர்பாக வெளியிட்ட தவறான கூற்று குறித்து, ஜப்பானின் பல்வேறு இடங்களிலும் எதிர்ப்பு பேரணிகள் நடைபெற்று வருகின்றன. நவம்பர் 28ம் நாளிரவு, டோக்கியோவில் ஜப்பான் மக்கள் பலர் பேரணியை நடத்தி, அமைதி அரசியல் அமைப்பு சட்டத்தில் ஊன்றி நின்று, தவறான கூற்றைத் திரும்பப் பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.
அதனையடுத்து நவம்பர் 29ம் நாள் டோக்கியோவில் ஜப்பானின் சில நூறு பேர், எதிர்ப்பு பேரணியில் ஈடுப்பட்டனர். “தகைச்சி ஆட்சியைத் தூக்கி எறி”, “சீனாவின் மீது அமெரிக்க மற்றும் ஜப்பானின் ஆக்கிரமிப்பு போரைத் தடு” முதலிய பதாகைகளைத் தூக்கி, தகைச்சி சனே முந்தைய தவறான கூற்றைத் திரும்பப் பெற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
படம்:VCG
