நேச்சர் குறியீட்டின் 2026 ஆராய்ச்சித் தலைவர்கள் பட்டியல் வெளியீடு

நேச்சர் குறியீட்டின் 2026 ஆராய்ச்சித் தலைவர்கள் பட்டியல் 10ம் நாள் வெளியிடப்பட்டது. இதில் உலக அறிவியல் சாதனைகள் தரவரிசையில், சீனா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.

தரவுகளின்படி, 2024ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சீனாவின் அறிவியல் சாதனைகள் 22.4 விழுக்காடு அதிகரித்துள்ளன. உலகின் 10 முன்னணி நாடுகளில் சீனாவைத் தவிர, முறையே அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், தென்கொரியா, கனடா, இத்தாலி ஆகிய நாடுகளும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இயற்பியல், வேதியியல், உயிரியல், பயன்முறை அறிவியல், பூமி மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் ஆகிய கல்வித் துறைகளில் சீனா முதலிடத்தில் உள்ளது. சுகாதார அறிவியல், சமூக அறிவியல் ஆகிய துறைகளில் அமெரிக்கா முன்னணியில் உள்ளது. ஆய்வு நிறுவனங்கள் ரீதியில், உலகின் 10 முன்னேறிய நிறுவனங்களில் 9 நிறுவனங்களுடன் சீனா, முதலிடத்தில் உள்ளது.

நேச்சர் குறியீடு, சர்வதேச புகழ் பெற்ற அறிவில் தொழில் நுட்பப் பதிப்பகமான ஸ்ப்ரின்கர் நேச்சர் குழுமத்தின் கீழுள்ள நிறுவனம் ஒன்றால் குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author