அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தனது நீக்கம் வேதனையளிப்பதாகவும், இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாகவும் சனிக்கிழமை (நவம்பர் 1) ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு (ஈபிஎஸ்) எதிராகச் செயல்பட்டதாகவும், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைக்கக் கோரி கெடு விதித்ததாகவும் கூறி, செங்கோட்டையன் சமீபத்தில் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.
பசும்பொன்னில் நடந்த தேவர் குருபூஜை நிகழ்ச்சியில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோருடன் இணைந்து கூட்டாக மரியாதை செலுத்தியது குறித்துச் செங்கோட்டையன் விளக்கமளித்தார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர செங்கோட்டையன் முடிவு
